Tamil Sanjikai

மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் நவம்பர் 24-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய எஸ்.யு.வி. காரின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னால் இந்த கார் யு400 எஸ்.யு.வி. என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அல்டுராஸ் ஜி4 மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. மேலும் இது மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட சங்யோங் ரெக்ஸ்டான் நான்காம் தலைமுறை மாடல்.

இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் ஹோன்டா சி.ஆர்.-வி. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அல்டுராஸ் ஜி4 கார் இந்தியாவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உயர் ரக 4WD மாடலில் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, டூயல் டோன் இன்டீரியர், குவில்டெட் நேப்பா லெதர், பவர் டிரைவர்சீட், மெமரி அம்சம், 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரினுள் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதி, 360 டிகிரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. இரண்டு வேரியன்ட்களில், ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.

காரின் வெளிப்புற வடிவமைப்பின் படி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 18-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், மஹிந்திரா லோகோ கொண்ட கிரில் கொண்டிருக்கிறது. புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. / 420 என்.எம். டார்கியூ செயல்தின் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய எஸ்.யு.வி. 2WD மற்றும் 4WD என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.

0 Comments

Write A Comment