Tamil Sanjikai

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாரதிய ஜனதா கட்சி தற்போது அங்கு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக, ஆட்சியிலிருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, கடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது.

இந்நிலையில், நேற்று சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள், திடீரென பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச் செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில், பாஜக-வில் இணைந்தனர். மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் கட்சி தாவினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதன் அடிப்படையில் தற்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜக அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment