தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்களை 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுபவர்களைக் கண்காணிக்க தமிழகத்தில் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் பொதுமக்கள் இந்த உத்தரவை கடைப்பிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நெல்லை சேரன்மகாதேவியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோன்று கோவையில் 30 பேர், திருப்பூரில் 42 பேர், விழுப்புரத்தில் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments