Tamil Sanjikai

நியூயார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுச்சபையின் 74வது அமர்வின் (யு.என்.ஜி.ஏ) பொது விவாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, செப்டம்பர் 27-ந்தேதி காலையில் உயர்மட்ட அமர்வில் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி, 2014ல் ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் தனது முதல் உரையை நிகழ்த்தி இருந்தார். இது முடிந்து நியூயார்க்கில் கிட்டத்தட்ட மேலும் ஒரு வார காலம் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

செப்டம்பரில் அவரது வருகை மற்றும் ஐ.நா.வில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது, தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறை பிரதமரான பிறகு இது முதல் முறையாகும்.

பேச்சாளர்களின் பட்டியலின் படி, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் செப்டம்பர் 27-ம் தேதி அன்று உலகளாவிய தலைவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். மோடியின் உரைக்கு பின்னர் இம்ரான் கான் உரையாற்றுகிறார்.

பேச்சாளர்களின் பட்டியலில் சுமார் 112 நாட்டு தலைவர்கள் உள்ளனர். 48 நாட்டு தலைவர்களும் 30-க்கும் மேற்பட்ட வெளியுறவு துறை அமைச்சர்களும் ஐ.நா. பொதுச்சபையின் விவாதத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Comments

Write A Comment