Tamil Sanjikai

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே சமயம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அரபிக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பிருப்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும், அரபிக் கடலில் உருவாக உள்ள புயல், வடமேற்கு திசையில் குஜராத்தை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும் புவியரசன் விளக்கம் அளித்தார்.

0 Comments

Write A Comment