தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பயோ மெட்ரிக் முறை கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்ட போதிலும், முறையான பயிற்சிகள், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், குறைகளை சரிசெய்து மாநிலம் முழுவதும் உள்ள 7,726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட உள்ளது. இதேபோல், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை வரும் கல்வியாண்டிலேயே அமல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுக்கு தேவையான விவரங்களை மே 17ம் தேதிக்குள் deessections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments