தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;-
தமிழகத்தில் தேர்தல் அதிஜாரிகளின் சோதனையில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 புகார்கள் வந்துள்ளன. அதில் 37 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments