துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6வது முறையாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஓ.பன்னீர்செல்வம் எழுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாதால் வரும் 28 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் ஓபிஎஸ் சந்தேகங்களை எழுப்பினார் என்று சசிகலா தரப்பும் சரமாரியாக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments