சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துளார் சிக்சர் மன்னனான கிறிஸ் கெய்ல்.
அப்ரிடி524 போட்டிகளில் விளையாடி 476 சிக்சர்களை பறக்க விட்டிருந்தார். ஆனால், அப்ரிடியை தற்போது கிறிஸ் கெய்ல் முந்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல், 12 சிக்சர்களை விளாசினார்.
ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இதன் மூலம் இவரது சிக்சர் கணக்கு 477 ஆனது. அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடம் பிடித்துள்ளார்.
0 Comments