பட்டாசு வெடிக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட ரசாயனங்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தக்கூடாது என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் காரணமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பட்டாசு தொழிலில் ஈடுப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நவம்பர் மாதம் முதல் பட்டாசு ஆலைகளை மூடி போராட்ட்த்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திருநெல்வேலி - மதுரை 4வழி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு போலீசார் மேற்க்கொண்ட பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொழிலாளர்களின் இந்த போராட்ட்த்தை முன்னிட்டு பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்த்து.
0 Comments