Tamil Sanjikai

கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் நடந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரிக்க, நியுசிலாந்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 அப்பாவி பொதுமக்க கொல்லப்பட்டனர். தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டான். இதுகுறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி வில்லியம் யங் ((William Young)) தலைமையில் வலிமைமிக்க நீதி விசாரணை குழுவை அமைத்து, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவானது, தாக்குதல் எப்படி நிகழ்ந்தது? இனி இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? போன்ற நியூஸிலாந்து நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டும் வழிகள் தொடர்பாக விசாரித்து, டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

0 Comments

Write A Comment