கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பல பயன்பாட்டுச் செயலிகளில், கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த பயன்பாட்டுச் செயலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் சிறப்பே எளிதாக ஷேரிங் செய்வதுடன்,கிளவுட் ஸ்டோரேஜ் திறனும் தான் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.
கூகுள் நிறுவனம் தற்பொழுது கூகுள் போட்டோஸ் செயலியில், 'டாக்குமெண்ட் கிராப்' என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையைக் கொண்டு உங்கள் டாக்குமெண்ட் போட்டோக்களை எளிதாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கிராப் செத்துக்கொள்ளலாம்.
டிஜிட்டல் டாக்குமெண்ட் சேவைக்கான தரத்தை உயர்த்துவதற்காகக் கூகுள் நிறுவனம் இந்த டாக்குமெண்ட் கிராப் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை முற்றிலும் மேனுவல் முறைப்படி பயனரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் எடிட் செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், நீங்கள் உங்கள் டாக்குமெண்ட் படத்தை கிராப் செய்யும்பொழுது உங்களால் ஜூம்-இன் செய்து மிகத் துல்லியமாக முனைகளை கிராப் செய்துகொள்ளலாம். அதேபோல் நீங்கள் கிராப் செய்தவுடன் உங்கல் படத்தை கூகுள் போட்டோஸ் தானாக ஒழுங்குப்படுத்திக்கொள்கிறது.
தற்பொழுது கூகுள் போட்டோஸ், புதிய சேவையை அதன் பயன்பாட்டு செயலியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை தற்பொழுது வெளியிடப்பட்ட கூகுள் போட்டோஸ் வெர்ஷன் 4.26 இல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி மி A3 ஸ்மார்ட்போனில் பயன்பாட்டில் உள்ளது.
0 Comments