திருவள்ளூர் மாவட்டம் புழல் காவல்நிலையத்தில், பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புழல் காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தாயின் 2வது கணவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் ஆய்வாளர் நடராஜனிடம் அளித்த புகாரை விசாரிக்காமல், புகார் கொடுக்கச் சென்ற தனக்கு காவல் ஆய்வாளர் நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரையும், தாயின் கணவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிறுமியின் இந்த மனு மே 10ல் விசாரணைக்கு வருகிறது.
0 Comments