Tamil Sanjikai

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் அறிக்கை தெரிவித்து உள்ளது.

ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்ட சத்து பற்றாக்குறைக்கு இலக்காகிறார்கள். 42 சதவீத குழந்தைகள் மட்டுமே (6 முதல் 23 மாதங்கள் வரையிலான வயது) போதிய அளவில் உணவை பெறுகிறார்கள். 21 சதவீத அளவிலான குழந்தைகள் மட்டுமே போதிய பல்வேறு வகையான உணவை பெறுகின்றனர்.

இந்திய பெண்களின் சுகாதாரத்தில், ஒவ்வொரு 2வது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பரவலாக ரத்த சோகை காணப்படுகிறது. சிறுவர்களை விட சிறுமிகளில் நோய் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.

5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது. ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெருமளவிலான பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

0 Comments

Write A Comment