Tamil Sanjikai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதற்க்கு தமிழக அரசு சார்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை அடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஆலையைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை இந்தக்குழு ஆய்வு செய்தது. மக்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு, தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு நடத்தி மக்களிடம் கருத்துக்களை கேட்டது. 'ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. 48 கவர்களில் ஸ்டெர்லைட் ஆலை ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர், காற்று மாசு உள்ளிடவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு தொடர்பான தங்களது அறிக்கையை சீலிட்ட உறையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு இன்று தாக்கல் செய்துள்ளது. விசாரணைக்காக வழக்கு நாளை பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

0 Comments

Write A Comment