தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டன. இதில் ஒழுங்காற்றுக்குழு அடிக்கடி கூடி நதிநீர் விவரங்களை பரிமாறி வருகிறது.
இந்த வகையில் இந்த குழுவின் 18-வது கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பிற மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தங்களது மாநில நீர்நிலை புள்ளி விவரங்கள், மழைவரவு போன்றவற்றை பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர். மேலும், நீரியல் புள்ளி விவரங்களை தொடர்ந்து கண்காணிப் பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 31-ந்தேதி திருச்சி யில் நடைபெறும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
0 Comments