Tamil Sanjikai

தமிழகத்தில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த அவர்களின் மொபைல்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதிகளை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "ஸ்கில் ட்ரைனிங் என்ற நடைமுறை பயிற்சி விரைவில் பள்ளிகளில் அமல் படுத்தப்படுதப்பட இருக்கிறது . அதன் மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் வேலை கிடைக்கும். சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படுவதாகவும் ,தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment