ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்று மூடப்படும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து பிளாஸ்டிக் உற்பதியாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் சங்கரன், முதலில் 14 பெருட்களுக்கு மட்டும் தான் தடை விதிக்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது பிளாஸ்டிக் கடைகளே இருக்க கூடாது என்று அரசு கூறி வருவதாகவும், இது பிளாஸ்டிக் பொருட்கள் தாயரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்தார்.
மேலும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
0 Comments