Tamil Sanjikai

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பொது அவர்கள் வாகனம் மீது தற்கொலைபடை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 40 கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களின் பலி ஆனார்கள், படுகாயம் அடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது ஆதில் அகமது தர் என்ற நபர் தான் என்பது தெரிய வந்துள்ளது, மேலும் அவனை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதில் அகமது தர் ஜம்மு காஷ்மீரின் கண்டிபா பகுதியைச் சேர்ந்தவன். கண்டிபா தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. ஆதிலின் தந்தையின் பெயர் ரியாஸ் அகமது. அவர் அங்கு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆதில் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, அருகிலிருக்கும் மில் ஒன்றிற்கு வேலை சென்று வந்துள்ளான். அப்போது இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதன் மூலம் இவனுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கிடைத்துள்ளது.

கடந்த 2016 மார்ச் மாதத்தில் இருந்து ஆதில் மற்றும் அவனது நண்பர்கள் தவுசீப் மற்றும் வாசிமை காணவில்லை. தவுசீப் மூத்த சகோதரர மன்சூர் தீவிரவாதி ஆவார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

அதன் பின் அவனை பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து மூளைச்சலவை செய்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு திடீரென காணாமல் போன ஆதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெற்றுள்ளான். அங்கு இருந்த பயங்கரவாத அமைப்பினர் அவனை தற்கொலை தாக்குதலுக்கு தயார்படுத்தியுள்ளனர். தயாராகிக் கொண்டிருந்த போதே, அவன் பெரிய தாக்குதல் ஒன்றிற்காக காத்து கொண்டிருந்துள்ளான். அதன்படி நேற்று இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளான். இவன், அந்த பயங்கரவாத அமைப்பின் சி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என போலீசார் கூறியுள்ளார்.

350 கிலோ வெடிமருந்துடன் வந்து பஸ்சில் மோதியதாக கூறப்படுகிறது ஆனால் பாதுகாப்பு துறை இது ஒரு பிரசாரம் என மறுத்து உள்ளது. 100 கிலோ வெடிமருந்துடன் எதிர் திசையில் வந்து பஸ்சில் மோதி உள்ளான்.

உள்ளூர் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து, அவர்களை தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்துவதை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடந்து செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, பர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டான். இவனைப் போல உள்ளூரைச் சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு, தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் இறந்தவர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் உடனடியாக ஆதில் அகமது தர் குறித்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு வீடியோ வெளியிட்டு உள்ளது. அதில் காஷ்மீர் முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்த பயங்கரவாத பேச்சுக்கள் உள்ளன. வீடியோவில் ஜெய்ஷ் - இ- முகமது பதாகைக்கு முன்னால் ஆதில் துப்பாக்கியுடன் காணப்படுகிறான்.

வீடியோவில் ஆதில் அகமது தர் பேசியுள்ளான். "இதை நீங்கள் பார்க்கும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். ஓராண்டாக ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பில் பணியாற்றினேன். இது காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி. இந்தியாவுக்கு எதிராக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். அதில் வடக்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் இணைய வேண்டும். எங்கள் அமைப்பின் தலைவரை சமீபத்தில் கொன்றுள்ளனர். அதனால் நாங்கள் வலுவிழந்து விடுவோம் என நினைத்துள்ளனர், அது நடக்காது" என்று கூறி உள்ளான்.

0 Comments

Write A Comment