Tamil Sanjikai

திமுக பொருளாளர் துரை முருகன் தனது பாஸ்போர்ட்டில் புத்தக பக்கங்கள் காலியானதால் புது பாஸ்போர்ட் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார், அனால் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்து, விண்ணப்பத்தை திருப்பி அளித்து விட்டது.

இதை எதிர்த்து துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அந்த வழக்கிலிருந்து தாம் கடந்த ஆண்டே அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை எனவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, பாஸ்போர்ட் அலுவலகம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்ததோடு, மீண்டும் விண்ணப்பித்தால் 4 வாரங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்க உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment