Tamil Sanjikai

யாருக்கும் அடிமையில்லை.
எதற்கும் உரிமையில்லை.
நானாக நான் போகும் வழியில்
எனக்காக நானே! எப்பொழுதும் நானே!
துணையென்று ஏதுமில்லை.
துயரென்றும் ஏதுமில்லை.
மௌனங்களின் மோகனத்தில்
ஓசைகள் தேவையில்லை.
உன்னோடு நான் என்றெதலாம் வெறுமெழுத்தே.
உயிராயே நீயானாய் என்றதெலாம் பொய்யெழுத்தே.
தானாக, நானாக, தனியாக ,நானாக.
தூரங்கள் அதிகமில்லை.
துயரங்கள் நீளவில்லை.
வலிகளினாற் வாழுகின்றேன்.
அரிதார அவதாரம்.
ஓர் நாளில் நானாவேன்.
காலமென ஆகி நிற்பேன்.
காற்றடித்த பையின் கடைசி மூச்சாய் நான் நிற்பேன்.
பூத கணமாகி புழுதி சேர்வேன்.
வாழந்ததின் அடையாளங்களில்
என் அன்பின் ரணங்களில் மட்டும் என் நினைவிருக்கும்.
யாரேனும் நொந்திருந்தால் எனக்கேதும் வெட்கமில்லை.
உண்மைகள் தானுரைத்தேன்.
உமக்கேதும் வருத்தமெனிற்...
தாழ் பணிந்த முத்தங்கள் பாதமெல்லாம் பாசங்கள்.
கடந்த பின் உணர்வில்லை எனக்கு.
உயிரோடு நீவிரிருந்தால் வருத்தலாமோ நானுமக்கு?
நீரும், நானும் நாமாவோம்.
நாமாலே ,தானான ,நன்மைகளாய் நாமாவோம்.
ஆன்மாவின் அர்த்தங்களாய் நாமிருப்போம்.
அன்பாலே நாமிருப்போம்.
அன்போடு நாமிறப்போம்!

அன்புடன்,
-Victor Irvin Mansingh.

 

 

0 Comments

Write A Comment