Tamil Sanjikai

இந்திய-அமெரிக்க விமானப்படைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 12 நாட்களுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா, பானாகார் ஆகிய 2 விமானப்படை தளங்களில் கூட்டு பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றன.

2 தளங்களில் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க, இந்திய விமானப்படைகள் அனைத்து ஒத்துழைப்பையும் உறுதி செய்யும்.

செயல்திறன் வெளிப்பாட்டை வழங்குவது, சிறந்த பயிற்சிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது ஆகியவையே இந்த கூட்டு பயிற்சியின் நோக்கம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் எப் 15 மற்றும் சி-130 ராணுவ விமானம் ஆகியவற்றையும், இந்திய விமானப்படை ஜாகுவார், மிராஜ் 2000, சூ-30 எம்கேஐ போன்ற விமானங்களையும் பயிற்சிக்கு பயன்படுத்தவிருக்கின்றனர்.

0 Comments

Write A Comment