அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால், வயது 40. இந்திய வம்சாவளி சீக்கியரான இவர், அங்குள்ள காவல்துறையில் பணியாற்றி வந்தார். டெக்சாஸின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான இவர், வடமேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது காரில் இருந்து வெளியே வந்த ஒருவர், போலீஸ் அதிகாரியின் பின்பக்கமாக நின்று அவரை சரமாரியாகச் சுட்டார். இதில் சந்தீப் சிங் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது, ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார், அதிகாரி சந்தீப் சிங்கை சுட்டுவிட்டு தப்பியோடியவரை மடக்கிப் பிடித்தனர். அவர் பெயர் ராபர்ட் (47) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தீப் சிங் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
0 Comments