அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 39வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. அந்த பட்டமளிப்பு விழாவில் பொறியியல் ஆராய்ச்சி(PhD) மாணவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆராய்ச்சி பட்டம் பெறும் மாணவர்கள் மேடைக்குச் சென்று பட்டத்தை பெறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேடையில் சென்று பெறுவதற்கு பதிலாக அவர்கள் இடத்தில் நின்றபடியே பட்டத்தை பெற்றுகொள்ளலாம் என்றும், பட்டமளிப்பவர் மேடையில் இருந்தே ஆசிகளை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பட்டமளிப்பு விழா நிறைவடைந்த பிறகு தங்கள் ஆசிரியர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும், கேமரா மொபைல் போன்றவற்றை எடுத்துவருபவர்கள் பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்புவரை பெற்றோர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை வழக்கத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments