Tamil Sanjikai

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என வந்தால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை கையாள தயங்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து இம்ரான் கான் மேலும் கூறியதாவது: "இந்தியா - பாக்., ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுதத்தை வைத்துள்ளன. போர் என ஒன்று நிகழ்ந்தால், நங்கள் அணு ஆயுதத்தை கையாள தயங்க மாட்டோம். அணு ஆயுதம் பயன் படுத்தினால் இரு நாடுகளுக்குமே அது பேரிழப்பை உருவாக்கும். இதில் யாருக்கும் வெற்றி என்பது இருக்காது. எனவே, அதை உணர்ந்து இந்திய செயல்பட வேண்டும்" என இம்ரான் கான் மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

0 Comments

Write A Comment