சென்னை கடற்கரை-திருமால்பூர் இடையே 10 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது.
சென்னை பரங்கிமலையில் கடந்தாண்டு ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வழியாக மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், திருமால்பூருக்கு மின்சார ரயில்கள் சேவை மீண்டும் துவங்கியுள்ளன.
இதன்படி செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு 4 மின்சார ரயில்களும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருமால்பூருக்கு 2 ரயில்களும் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே மாலை நேரங்களில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments