Tamil Sanjikai

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து அவர் பேசினார்.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தால் 10 கோடி பேர் பயன்பெறுவர். இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு பிரதம மந்திரி ஸ்ரீம் யோகி மந்தன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .இதில் ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் உறுதிப்படுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம்.
  • பொருளாதார நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும்
  • இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.

0 Comments

Write A Comment