Tamil Sanjikai

சரித்திர கதையான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க உள்ளது.. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஓன்று இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

0 Comments

Write A Comment