Tamil Sanjikai

கடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான மூலமாக தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு தாக்குதலுக்கு காரணம் ஈரான் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின.

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாடு மீது பொருளாதார தடைகள் விதித்ததற்கு பதிலடியாக , சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்ததியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை அனுப்பும்படி அமெரிக்காவிடம் சவுதி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து 3 ஆயிரம் வீரர்களை சவுதிக்கு, அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனது டுவிட்டர் பக்கத்தில், "ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்கவும், சவுதி பாதுகாப்பை பலப்படுத்தவும், சவுதி அரேபியாவுக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்புகிறது. ஈரான் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் தனது பொருளாதாரம் சீரழிவதை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment