தனுஷ் நாயகனாக நடிக்து, கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மாரி 2. இந்தப் படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
கடந்த டிசம்பரில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்திருந்தனர்.
தனுஷ் எழுதி பாடியிருந்த 'ரவுடி பேபி' பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா, நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் வீடியோ வெளியானதில் இருந்து தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. அதன்படி ரவுடி பேபி பாடல் வெளியாகி 149 நாட்களில் 500 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.
0 Comments