Tamil Sanjikai

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்கும் சிடி ஸ்கேன் கருவி, தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னை தரமணியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ளது.

இந்தக் கருவியில் பயோகிராப் விசன் 600 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய முடியும். இந்த ஸ்கேன் கருவியின் முடிவுகளும், படங்களும் அதிக துல்லியத்துடன், மிகத் தெளிவாகவும் இருக்கும் என்பதால், மிகச்சரியாக சிகிச்சை அளிக்க உதவுவதுடன் . மீண்டும் அந்த நோய் ஏற்படுகிறதா என்பதை கண்டறியும் திறனையும் பெற்றது.

இந்த சிடி ஸ்கேன் கருவியின் உதவியால் புற்றுநோய் செல்கள் உள்ள இடத்தை மட்டும் கதிரியக்கம் மூலம் தாக்கி அழிக்க முடியும். ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாது. புரோட்டான் தெரபி என்ற அதிநவீன கதிரியக்க சிகிச்சை மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

0 Comments

Write A Comment