காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தை அடுத்துள்ள செட்டிப்பேடு பகுதியில், இன்று அதிகாலை 6 மணி அளவில் சவிதா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆயிரத்து 700 மாணவர்கள் தங்கியுள்ள, எட்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 228 அறைகள் உள்ளன. இதில் நான்காவது மாடியில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீப்பற்றியவுடன், மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு விடுதி அறைகளில் இருந்து வெளியேறினர். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பூந்தமல்லி சிப்காட் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் நான்காவது மாடியில் உள்ள 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன.
புகை மூட்டம் காரணமாக 10 மாணவர்கள் சிறு பாதிப்பு ஏற்பட்டு சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சவிதா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
0 Comments