மும்பை கிராபட் மார்க்கெட் பகுதியில் அக்கா, தங்கை 2 பேர் சம்பவத்தன்று டாக்சியில் வந்து இறங்கினர். அப்போது அவர்களது எதிரே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அக்கா, தங்கை இருவரையும் தனது செல்போனில் 2 பேரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட அவர்கள் வாலிபரிடம் தட்டிக்கேட்டனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
உடனடியாக அக்கா, தங்கை இருவரும் அந்த வாலிபரை பிடிக்கும்படி சத்தம்போட்டனர். அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
இதில், அவர் மார்க்கெட்டிற்கு வரும் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில், அந்த வாலிபர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பா இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் கல்பாதேவியை சேர்ந்த சுனில்(வயது29) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments