Tamil Sanjikai

அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வியட்நாம் செல்லும் வடகொரிய அதிபரின் பயணத்திட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரயில் மூலம் சீனா சென்று அங்கிருந்து கார் மூலம் வியட்நாம் தலைநகர் ஹனோய் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதற்காக கிம் ஜாங் உன் 2 ஆயிரத்து 759 கிலோ மீட்டர் தூரம் பிரத்யேக ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். முன்னதாக ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் கடந்த 2001ம் ஆண்டு ரயிலிலேயே சீனா வழியாக ரஷ்யா வரை ரயிலில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இருநாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தையை வரவேற்கும் விதமாக வட கொரிய இளைஞர்கள் டிரம்ப் போலவும், உன் போலவும் தலைமுடியை மழித்துக் கொள்கின்றனர்.

0 Comments

Write A Comment