Tamil Sanjikai

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான "மஞ்சள் ஜாக்கெட்" என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்.

மேலும், பாரீஸின் சேம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சில அருங்காட்சியகங்களும் மூடப்பட இருக்கிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வன்முறை கடந்த சனிக்கிழமை பாரீஸில் நடைபெற்றது. மக்களின் வன்முறை போராட்டத்துக்கு காரணமான எரிபொருள் உயர்வை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக அறிவித்துவிட்டாலும், இதுபோன்ற மற்ற விவகாரங்களில் அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக மக்களின் போராட்டம் தொடர்கிறது.

0 Comments

Write A Comment