Tamil Sanjikai

அஜித் நடித்து சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்து முடித்திருக்கும் படம் விஸ்வாசம், அஜித் - சிவா கூட்டணியில் தொடர்ச்சியாக வெளியாகும் நான்காவது படமாகும் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி மாபெருமளவில் வைரலானது. இதையடுத்து தற்போது படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'யு' தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவெனில் படத்தில் ஒரு காட்சி கூட நீக்கப்படவில்லை. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனை அடுத்து ட்விட்டரில் #ViswasamCensoredU, #ViswasamPongal2019 ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும் விஸ்வாசம் படத்தின் புதிய ஸ்டில்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

0 Comments

Write A Comment