Tamil Sanjikai

ஐதராபாத்தின் நர்சிங்கி என்ற பகுதியில் PBEL City என்ற அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இருந்த மின்சார கம்பியை அங்கே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் தவறுதலாக பிடித்ததால் அவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் சுமார் ஒரு நிமிடம் வரை மின்சாரம் பாய்ந்த நிலையில், சிலைபோல் நின்றுள்ளான். அவன் விளையாடுவதாக எண்ணி, அருகில் இருந்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

சிறுவன் கீழே விழுந்த பிறகு தான், அவனை மின்சாரம் தாக்கியதை பொதுமக்கள் உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த அந்த சிறுவனின் தந்தை அங்குள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரணமடைந்த சிறுவன் ஒன்றாம் வகுப்பில் படித்து வந்துள்ளான். சிறுவன் மின்சாரம் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்த குடியிருப்பின் பரமாரிப்பு பணிகளை கவனித்து வந்த தனியார் நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment