Tamil Sanjikai

பாரிஸில் செயல்படும் FATF (Financial Action Task Force) எனப்படும் சர்வதேச நிதி அமைப்பின் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்குவதாக பாகிஸ்தான் மீது அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அண்மையில் இந்த அமைப்பின் குழுவினர் பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிரவாதத்திற்கு எதிரான நிதிக் குற்றத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.

நிதி கண்காணிப்பு பிரிவு 2018 ல் 8,707 சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை அந்த குழு கண்டறிந்து உள்ளது.

ஆனால் இந்தியாவின் நெருக்குதலால் தான் இந்த தடை பாகிஸ்தான் மீது சுமத்தப்படுவதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்

0 Comments

Write A Comment