Tamil Sanjikai

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கார்களை குத்தகைவிட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு காரை 5 வருடம் வரை குத்தகைக்கு எடுக்கமுடியும் என தெரிகிறது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கேயூவி 100, டியூவி 300, ஸ்கார்ப்பியோ, மராஸோ மற்றும் எக்ஸ் யூ வி500 கார்களை குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளது. இந்தக் குத்தகையின் மூலம் ஒரு மாதத்துக்கு 13,499 ரூபாய் முதல் 32,999 ரூபாய் வரை செலுத்தி காரை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தக் குத்தகை விலை கார்களுக்கு கார் மாறுபடும். தற்போது டெல்லி, மும்பை, ஹைதரபாத், பெங்களூர், அகமதாபாத் மற்றும் பூனே ஆகிய நகரங்களில் மட்டும் இச்சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

இன்னும் 19 நகரங்களில் இந்தச் சலுகையை அறிமுகப்படுத்த உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்தக் குத்தகை திட்டத்தில் காப்பீடு, மெயின்டெனன்ஸ், சாலைகளிலேயே வந்து பழுது பார்த்தல் போன்ற பல வசதிகளையும் சேர்த்து மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

இந்தத் திட்டத்துக்காக உலக அளவில் பிரபலமான குத்தகை நிறுவனங்கள் ஓரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த 5 வருடங்கள் வரை இந்தத் திட்டத்தின் மூலம் கார்களை குத்தகை எடுத்துக்கொள்ளலாம். இது நாம் தேர்ந்தெடுக்கும் கார்களை பொறுத்து மாறுபடும் என்று தெரிகிறது.

0 Comments

Write A Comment