Tamil Sanjikai

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்று கொடுத்துள்ளார் பி.யூ.சித்ரா.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.

சித்ரா கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் ஆவார். கடும் வறுமைக்கு இடையில், போராடி பயிற்சி பெற்று இன்று தங்கம் வென்றுள்ளார். 23 வயதே ஆனா சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை புரிந்திருந்தார். அவரை தொடர்ந்து சித்ராவும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

0 Comments

Write A Comment