பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், #HappyBdayPMModi #happybirthdaynarendramodi போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகள் மக்கள் சேவையாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
0 Comments