ஹாங்காங்கில் கொண்டுவரப்பட உள்ள நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் பல்லாயிரக் கணக்கானோர் ஓன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட உள்ளதற்கு சர்வதேச அளவிலும், உள்நாட்டில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் ஓன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விக்டோரியா பார்க் பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் பதவி விலக வேண்டும் என்று முழுக்கமிட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஹாங்காங் போராட்டத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
0 Comments