நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் நடிகை அனிஷா ரெட்டி தம்பதியின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து இந்த வருட ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் அறிவித்திருந்தார். அதாவது 'பெல்லி சூப்லு', 'அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை உறுதி செய்யும் விதமாக இவர்கள் ஜோடியாக இருக்கும் படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் 16ம் தேதியான இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது ஹைதராபாத்தில் விஷால்-அனிஷா ரெட்டி தம்பதியின் நிச்சயதார்த்தவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மிக முக்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments