Tamil Sanjikai

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் தோட்டாக்களுடன் இருந்த 9 எம் எம் வகை துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள மீன் சந்தையில் தனது ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தாய் நிறுத்திவிட்டு , துறைமுகத்தில் பணிபுரியும் சற்குணம் என்பவர் சந்தையில் மீன் வாங்க சென்டர். மீன் வாங்கிவிட்டு வெளியில் வந்தா அவர், தனது வாகனம் என கருதி அதே நிறத்தில் இருந்த மற்றொரு ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை எடுத்துள்ளார்.

சீட்டிற்கு பின்புறம் திறந்து மீன் பையை வைக்க முயன்ற போது, அதில் துப்பாக்கி இருந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த சற்குணம் . உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமங்களம் போலீசார் துப்பாக்கியுடன் இருந்த வாகனத்தை கைப்பற்றினர்.

9 எம் எம் ரக துப்பாக்கியால் மொத்தம் 7 தோட்டக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அது காவல் ஆய்வாளர் ஒருவரின் துப்பாக்கி என்றும், இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த நிலையில் அவருடைய மனைவி அதை தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளரும் அதை மறுத்துவிட்டதால் ராஜமங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment