Tamil Sanjikai

வங்கி கடன் வழக்கில் தேடப்பட்டு வரும் பொருளாதார குற்றவாளியான, மோசடி மன்னன் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதியளித்து லண்டன் மாநகர நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, லண்டன் ராயல் நீதிமன்றம் அவருக்கு இன்று அனுமதியளித்துள்ளது. முன்னதாக, மல்லையாவின் மேல்முறையீட்டு மனு, இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இருக்கும் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த, சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன் பலனாக மல்லையா, லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

ஜாமினில் வெளிவந்த மல்லையாவை நாடு கடத்த, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பலனாக, அவரை நாடு கடத்த, பிரிட்டன் அரசு சம்மதம் தெரிவித்தது.

0 Comments

Write A Comment