Tamil Sanjikai

இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்குத் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Comments

Write A Comment