113 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுள்ளது.
அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தீர்ப்பின் நகல்கள், தீர்ப்புரை போன்றவை பிராந்திய மொழிகளில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும் தீர்ப்புகள் இனி பிராந்திய மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் தமிழ் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தமிழிலும் தீர்ப்புகள் வெளியாக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது. 113 வழக்குகளின் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சரவணபவன் ராஜகோபால் மீதான ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு தமிழில் இடம்பெற்றுள்ளது.
0 Comments