ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது.
அதையடுத்து கோவை விமான நிலையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைகளை மீறியதால் ஸஃடெர்லைட் ஆலை மூடப்பட்டது என்றார்.
அத்திகடவு அவினாசி திட்டத்திற்கு ஆயிரத்து 532 கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்றும் விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யபட்டு பணிகள் துவங்கும் என்றும் கூறினார்.
0 Comments