ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஓன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சுற்றுலா பேருந்து ஒன்று பயணிகளுடன் வால்மீகி கோண்டா அருகே நெடுஞ்சாலையில் மேரெடுமிலி மற்றும் சிந்துரு பகுதிகளுக்கு இடையே வரும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments