மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கக்கோரி கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் ஆட்சியர் வீரராகவராவ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் , ஏற்றுமதியாகும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து, ஆட்சியரின் உறுதியை ஏற்ற விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
0 Comments